திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை கடும் சேதத்துக்குள்ளாக்கிய மழை, வெள்ளத்துக்கு சுமார் 500 மக்கள் உயிரிழப்பு மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய சுப்ரீம் கோர்ட் அனுமதித்ததை தொடர்ந்து இருதரப்பினரின் போராட்டங்கள் போன்றவற்றால் அம்மாநிலம் தொடர்பான செய்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்நிலையில், முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிசபையின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
சட்டசபை கூட்டத்தை நவம்பர் 26-ம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ம் தேதிவரை நடத்தி தருமாறு அம்மாநில கவர்னர் சதாசிவத்துக்கு மந்திரிசபை கோரிக்கை முன்வைத்துள்ளது.