கொழும்பு: பிரதமராக ராஜபக்சே தேர்வு வெட்ககேடானது என பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத ஒருவரை பிரதமராக நியமித்தது வெட்ககேடானது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவரே பிரதமர் என இலங்கை அரசியலமைப்பில் உள்ளது. எனக்கும், அமைச்சர்களுக்கும் நெருக்கடியை தொடர்ந்து கொடுத்து வந்தார் சிறிசேன. தான் செய்த தவறை மறைக்க சிறுவர்கள்கூட நம்பாத கதைகளை கூறிவருகிறார். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.