Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், லோக்தந்திரிக் ஜனதா தள தலைவர், சரத் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டில்லியில் சந்தித்து பேசினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியில், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி, கூட்டணியில் இருந்து, கடந்த மார்ச்சில் விலகினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு எதிராக, மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சியில், அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று டில்லி வந்த சந்திரபாபு நாயுடு, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், லோக்தந்திரிக் ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான, பரூக் அப்துல்லாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.மேலும், இடதுசாரி கட்சி தலைவர்கள் உட்பட மேலும் பல தலைவர்களை சந்தித்து பேச, அவர் திட்டமிட்டுள்ளதாக, கூறப்படுகிறது. ஆந்திராவில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க, மத்திய அரசு, சதித்திட்டம் தீட்டி வருவதாக, சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். மேலும், ஆந்திராவில் உள்ள வழிபாட்டு தலங்களில், தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அவர் அச்சம் தெரிவித்தார்.


Share this page