Select Page

City Union Bank



Share this page

ஐதராபாத் : இந்தியா, ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு. இங்கு நாட்டை ஆண்டவர்கள் குடும்பம் மட்டுமே லாபம் அடைந்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பா.ஜ., யுவ மோட்சா விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ., குடும்ப கட்சி அல்ல. ஜாதி, மதம், மொழி அடிப்படையில் அரசியல் செய்யும் கட்சியும் அல்ல. வாஜ்பாய், பா.ஜ.,வின் மிகப் பெரிய தலைவர். இருந்தும் அவரையோ அத்வானியையோ நாங்கள் அடையாளபடுத்தவில்லை. இன்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் உள்ளனர். தலைமை மாறிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு தனி நபரின் பெயரை வைத்தும் இந்த கட்சி இயங்கவில்லை. கொள்கைகள் அடிப்படையிலேயே பா.ஜ., செயலாற்றி வருகிறது.

பிரதமரின் வாரிசு பிரதமராக வேண்டும். முதல்வரின் வாரிசு முதல்வராக வேண்டும் என்ற நிலையை நாங்கள் மாற்றி உள்ளோம். ஜனநாயகம் என்பது யாரையும் சார்ந்தது இல்லை. இந்தியா ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு. இங்கு நாட்டை ஆண்டவர்களின் குடும்பம் மட்டுமே பயனடைந்துள்ளது. விவசாயம், தொழில்துறை போன்ற முக்கிய துறைகளின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.


Share this page