புதுடில்லி : சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இது குறித்து ராகுல் கூறுகையில், ரபேல் ஊழல் தொடர்பான விசாரணையை தடுப்பதற்காக பிரதமர் மோடியால் சிபிஐ தலைவர் நீக்கப்பட்டுள்ளார். பிரதமரின் இந்த செயலை கண்டித்து காங்., சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
டில்லியில் லோதி சாலை பகுதியில் சிபிஐ தலைமையகம் முன்பு காலை 11 மணிக்கு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.