Select Page

City Union Bank



Share this page

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்றார். பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ.கட்சி தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், வேல்முருகன், சுவாமி அக்னி வேஷ், பி.ஆர்.பாண்டியன், பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மத்திய பாஜக அரசை வீழ்த்த அனைத்து ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Share this page