Select Page

City Union Bank



Share this page

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வேகப்படுத்தி உள்ளது. மேலும் மாநிலத்தில் இரட்டை பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.இதன் எதிரொலியாக புதுச்சேரியில் இரட்டை பதவியில் இருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்திடம் இருந்து ஏதேனும் ஒரு பதவி பறிக்கப்படலாம் என தகவல் வெளியானது. அவரது கட்சிப் பதவியை பறிப்பது தொடர்பாக முகுல் வாஸ்னிக் மூலம் அகில இந்திய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மாற்றம் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. புதிய தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் அல்லது வேறு யாரேனும் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களில் ஒருவரும், காங்கிரஸ் அகில இந்திய செயலாளருமான சஞ்சய் தத் வருகிற 23ம்தேதி புதுச்சேரி வருகிறார். 3, 4 நாட்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முகாமிட்டு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மட்டுமின்றி மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாகவும், குழுக்களாகவும் சந்திக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் களப்பணிகளை முடுக்கி விடுவது, மக்களிடம் மத்திய அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூறுவது மட்டுமின்றி கட்சி நிலவரம் தொடர்பாகவும் விவாதிக்கிறார். அப்போது புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் மாற்றமும் இருக்கும் என கூறப்படுகிறது.


Share this page