Select Page

City Union Bank



Share this page

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், 850 விவசாயிகளின் வங்கி கடன்களை திருப்பி செலுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்,76, கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் 350 விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை திருப்பி் செலுத்தினார்.இந்நிலையில் நிலையில், இந்த ஆண்டு உபி. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 850 விவசாயிகளின் வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார்.

இது குறித்து அமிதாப் பச்சன் முகநூலில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு 350 விவசாயிகள் வங்கி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தார்கள். அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தி தற்கொலை செய்யும் முடிவிலிருந்து தடுத்தேன். இந்த ஆண்டு உ.பி. மாநிலத்தில் 850 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களின் ரூ.5.5 கோடி விவசாயக் கடனை வங்கியில் செலுத்தி இருக்கிறேன் விவசாயிகளுக்காக நாம் ஏதாவது செய்துவருவது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.


Share this page