போபால் : மத்திய பிரதேசத்தில் வியாபம் எனப்படும் வேலைவாய்ப்பு தேர்வுத் துறையில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள், வழக்கை விசாரித்தைவர்கள் என இதுவரை 40க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கிறது.
இந்நிலையில்இந்த வழக்கில் தொடர்புடைய மணீஷா ஷர்மா என்ற டாக்டர் லக்னோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த போது சி.பி.ஐ. போலீசாரால் 2015-ல் கைதானார்.
குவாலியரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகயிருந்தார். நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அளவுக்கு அதிகமான மயக்க மருந்தினை ஊசி மூலம் தனக்கு தானே ஏற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.