புதுடில்லி: பிரதமர் மோடியை விமர்சித்து காங். எம்.பி. சசிதரூர் எழுதிய புத்தகம் ட்விட்டரில் பெரும் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
காங். எம்.பி.சசி தரூர், ‘தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி இன் இந்தியா’ என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகக்தின் தலைப்பு பற்றிய பேச்சைவிட பிரதமர் மோடியை அவர் விமர்சித்து ஆங்கிலத்தில் கூறிய ஒற்றை வார்த்தைதான் ட்விட்டரில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதிகமான சொற்கள் கொண்ட இந்த நீளமான ஆங்கில வார்த்தையை சசிதரூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த வார்த்தையை நெட்டிசன்கள் பல்வேறு விதங்களில் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
அமேசான் ஆன் லைன் நிறுவனம் கூறுகையில், சசிதரூர் எழுதிய புத்தகத்தில் பிரதமர் மோடி பேச்சு ஒன்றாகவும், செயல்பாடு ஒருவிதமாகவும் இருக்கிறது, இதுபோன்ற பிரதமரை நாடு கண்டிருக்காது. இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.