புதுடில்லி: மெகா கூட்டணி தோல்வியடைந்த கொள்கை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராய்ப்பூர், மைசூரு, ஆக்ரா உள்ளிட்ட பா.ஜ., பூத் தொண்டர்கள் இடையே நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: முந்தைய அரசு விட்டு சென்ற பணிகளை, முன்னெடுத்து சென்ற நம்மை சிலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த பணிகளை ஏன் முடிக்கவில்லை என கேட்கும் அவர்களிடம் கேட்க நான் விரும்புகிறேன். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த திட்டங்களை நமது அரசு தான் நிறைவேற்றியது. முந்தைய அரசு, நமது பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்காமல், அவமானத்தை ஏற்படுத்தியது பெரிய கவலை தரும் செய்தியாகும்.
மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த திட்டம். அற்ப காரணங்களுக்காக ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்யும் கட்சிகள், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது ஆட்சியமைக்க முயற்சி செய்கின்றன. இதனை நாம் கர்நாடகாவில் பார்த்துள்ளோம். இதேபோன்ற முயற்சிகள் உ.பி., ம.பி.,யில் நடக்கிறது. இதன் பின்னணி குறித்து நமது தொண்டர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
