புதுடில்லி: அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இறுதியில் நேற்று நிலவரப்படி அமெரிக்க டாலாருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.39 ஆக புதிய வீழ்ச்சியை சந்தித்து.
இது குறித்து பா.ஜ.வையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி விமர்சித்து கருத்து தெரிவித்து வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யாஷ்வந்த்சின்கா கூறியது,நாடு சந்தித்து வரும் மிகப்பெரிய பொருளாதார சிக்கலால் இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துவிட்டது.
நமது நாட்டு பிரதமர் மோடி முன்னர் குஜராத் முதல்வராக இருந்த போது ரூபாய் மதிப்பு ரூ. 60 ஆக ஐ.சி.யு. ( தீவிர சிகிச்சை பிரிவில்) இருந்து. இப்போது அவர் இந்திய பிரதமராக வந்து நான்கு ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு ரூ. 75 ஐ நெருங்கி கோமா நிலைக்கு சென்று விட்டது. இதற்கு மோடி என்ன பதில் சொல்ல போகிறார் என்றார்.