Select Page

City Union Bank



Share this page

அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து நக்சலைட்கள் அடியுடன் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

லக்னோவில் அதி விரைவுப்படை உருவாக்கப்பட்டதன் 26ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

இந்தியாவில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126ஆக இருந்தது. அது தற்போது 10 – 12ஆக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து நக்சலைட்கள் அடியுடன் ஒழிக்கப்படுவார்கள்.

நடப்பாண்டில் மட்டும் 131 மாவோயிஸ்ட்கள் மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 1,278 பேர் கைது செய்யப்பட்டு, 58 பேர் சரண் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கு பக்க பலமாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் இருக்கின்றனர்.

என்று ராஜ்நாத் சிங் கூறினார்.


Share this page