Select Page

City Union Bank



Share this page

தமிழக ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது இந்த சந்திப்பு நிறைவு பெற்றது.


இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்ர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வானிலை ஆய்வு மையம் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கனமழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார். நிவாரண முகாம்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதி உட்பட அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வந்தால், அதை எப்படி சமாளிப்பது என்பதை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கவர்னரை சந்திக்க உள்ளார் என கூறப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் தனது இல்லத்தில் இருந்து ஆளுநரை சந்திக்க புறப்பட்டு சென்றார். இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் பன்வரிலாலை சந்திக்க உள்ளார்.

Tags:

Share this page