Select Page

City Union Bank



Share this page

உத்தரகாண்டில் இருந்து டெல்லி ராஜ்காட் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி வருகின்றனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வத்து 70000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உத்தரகாண்டில் இருந்து டெல்லி ராஜ்காட் நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தி வருகின்றனர். ஹரித்வாரில் இருந்து ஏராளமான வாகனங்களில் புறப்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விரைந்தனர். பெரும் திரளாக வந்த விவசாயிகளை உத்தரபிரதேசம் – டெல்லி எல்லை பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் வாகனங்களில் இருந்து விவசாயிகள் இறங்கி பேரணியாக டெல்லியை நோக்கி முன்னேறுகின்றனர். தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து வருகின்றனர, எனினும் தடுப்புகளை மீறி விவசாயிகள் முன்நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர். எனவே காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விவசாயிகள் பாரத்திய கிஷான் சங்கத்தின் தலைவர் நரேஷ் திகாட்டி தெரிவிக்கையில்… எங்களுத்து தேவையான உதவிகளை அரசு செய்யா பட்சத்தில் நாங்கள் பாக்கிஸ்தான் அல்லது வங்கதேசத்திற்கு இடம்பெயற்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23-ம் தேதி உத்தரகாண்டின் பதஞ்சலி பகுதியில் தொடங்கி இந்த பயணம் அக்டோபர் 2-ஆம் நாள் (இன்று) புதுடெல்லி கிசான் காதில் முடிவடைகிறது. இந்த பயணமானது முசாபர்நகர், துராலா, பார்பராபுர், மோடி நகர், முரடநகர் மற்றும் ஹிந்தான் காட் ஆகிய வழிகளில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Share this page