Select Page

City Union Bank



Share this page

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்ததற்காக பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் வகைப் போர் விமானங்களை வாங்குவதற்கு உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் மாறி மாறி சமூக வலைத்தளத்திலும் வெளிப்படையாகவும் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்ட இதற்க்கு பாஜக கட்சி பதலடி கொடுப்பதையே தற்போது இரண்டு கட்சிகளும் முழுநேர வேலையாக செய்து வருகின்றனர்.

தற்போது, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராக உள்ள ரம்யா, டுவிட்டரில் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளதுடன், அவரது புகைப்படத்தையும் கேலி செய்யும் வகையில் வெளியிட்டுள்ளார்.

ரம்யாவின் டுவிட்டர் பதிவு, பிரதமர் மோடியை குறிவைத்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையது ரிஸ்வான், Gomitnagar காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ரம்யா மீது உத்தரப்பிரதேச போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு (Section 124A) செய்துள்ளனர்.

 


Share this page