Select Page

City Union Bank



Share this page

அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றவேண்டியதில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

அரசுப் பணி பதவி உயர்வுகளில் SC/ST பிரிவினருக்கு 22.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், SC/ST பிரிவினருக்கு பதவி உயர்வு நடவடிக்கை கடந்த 2006 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசு கோரியிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பினையும் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், “அரசு பணிகளில் சேரும் போது  SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பணி உயர்வில் போது இடஒதுக்கீடு அவசியம் கிடையாது’. மேலும், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது.


Share this page