புதுடில்லி : டில்லியில் நேற்று இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, டில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். விவிஐபி.,க்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே மோடி மெட்ரோ ரயிலில் பயணித்ததாக கூறப்பட்டது.
மோடியின் இந்த மெட்ரோ ரயில் பயணம் குறித்து கர்நாடகா காங்., கட்சியில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மோடியின் மெட்ரோ ரயில் பயண போட்டோக்களை பதிவிட்டு அத்துடன், டில்லியில் உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் – டீசல் விலை மோடியை மெட்ரோ ரயிலில் பயணிக்க வைத்து விட்டதா? அல்லது மற்றொரு தேர்தல் மாயாஜாலமா? கேள்வி எழுப்பி உள்ளது.