வாரணாசி: பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ. 500 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசுகையில்:
வாரணாசியில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்பதே எங்களின் ஆசை. இதனால் இங்கு அரசு நன்றாக செயல்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. கடந்த ஆட்சியாளர்கள் வாரணாசிக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது சுற்றுவட்டச்சாலை அமைக்கப்படுகிறது.
சாலை, விமானம், ரயில் என அனைத்து வழியிலும், அனைத்து நகரங்களும் இணைக்கப்படும். மருத்துவ மையம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. கங்கை தூய்மை பணிக்கு ரூ. 600 கோடி ஒதுக்கியுள்ளோம். இங்கு சர்வதேச கும்பமேளா 2019ல் நடத்தப்படும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.