புதுடில்லி: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தனது மகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டு இந்தியா வெட்கி தலைகுனிகிறது. பிரதமரின் மவுனத்தை ஏற்க முடியாது. இந்திய பெண்களை பாதுகாப்பற்ற முறையில் விட்டதற்கும், பலாத்காரம் செய்பவர்கள் சுதந்திரமாக நடமாட விட்டதற்கு அரசு அவமானப்பட வேண்டும். இவ்வாறு அதில் ராகுல் கூறியுள்ளார்.