Select Page

City Union Bank



Share this page

2014 ஆம் ஆண்டு முதல் விஜய் மல்லையாவை சந்திக்கவே இல்லை. அவர் கூறுவதில் உண்மை இல்லை என நடுவண் அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் விஜய் மல்லையாவை சந்திக்கவே இல்லை. அவர் கூறுவதில் உண்மை இல்லை என நடுவண் அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இதுக்குறித்து வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜரானா விஜய் மல்லையா.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அபொழுது கூறியதாவது, ஜெனீவாவில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருந்ததால், நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து, வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் எனவும், கடன்களை திரும்ப செலுத்துவதாக கூறி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். இது தான் உண்மை. என் மனசாட்சி தெளிவாக உள்ளது என்று கூறினார்.

இவரின் பேச்சுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அருண் ஜெட்லி – விஜய் மல்லையா சந்திப்பு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் எப்படி இந்தியாவை விட்டு விஜய் மல்லையா வெளியேற அனுமதிக்கப்பட்டார்? என கேட்டுள்ளது காங்கிரஸ்.

இந்நிலையில், விஜய் மல்லையா கூறியதில் “உண்மை” இல்லை என்று நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மல்லையா “பொய்யை உண்மை போல” கூறியுள்ளார். அதற்காக அவர் கூறுவது “உண்மை ஆகாது” என்றும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், நான் அவரை(விஜய் மல்லையா) சந்திக்கவில்லை. அவர் கூறுவதில் முற்றிலும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்து “உண்மை நிலை” என்று கடிதத்தை பதிவு செய்துள்ளார்.

 

ANI

@ANI

Finance Minister Arun Jaitley’s statement on Vijay Mallya’s claim that he met the finance minister before he left.


Share this page