Select Page

City Union Bank



Share this page

திருவாரூரிலும் திருப்பரங்குன்றத்திலும் குக்கர் என்ற டோக்கன் கொடுத்துவிட்டோம் உங்களால் என்ன செய்ய முடியும் என அ.தி.மு.கவிற்கு டி.டி.வி தினகரன் சவால்விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்களத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி நதி நீரை வீணாக கடலில் கலக்கவிட்ட அ.தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டார் அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகளுக்காக போராடும் அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர் பாண்டியன் மற்றும் காவிரி ரங்கநாதன் போன்றோர்கள் எந்தவிதமான  அரசியல் சாயமும் பூசப்படாதவர்கள். அவர்கள் நம்முடைய போராட்டத்தை புரிந்துகொண்டு வருகை தருகிறார்கள் என்றால் விவசாய பெருங்குடிமக்களுக்கான போராட்டமாகவும். காவிரி நதிநீர் விணாக கடலில் கலப்பதை பாதுகாக்க தவறிய இந்த அரசால் நம் விவசாயிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் இந்த அரசாங்கம் கண்ணிருந்து பார்வையில்லாத காத்திருந்து கேட்கமுடியாத இந்த அரசாங்கத்திருக்கு எதிராக  நம் தஞ்சை டெல்டா விவசாயிகள் சார்பாக  இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என துவக்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய தினகரன், “எங்க வீட்டு கல்யாணத்துல சாம்பார் வாளி தூக்கியவர் அமைச்சர் ஆர்.காமராஜ். இவர் நேற்று அமைதிப்படை ஓ.பி.எஸ்-சைக் கூப்பிட்டுவந்து ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார். அந்த கூட்டத்தில் என்னை தாக்கி பேசுறேன் என நினைத்து இன்று தமிழ்நாடு முழுவதும் என்னை பிரபலபடுத்தியுள்ளார். இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னர் கரிகால சோழனால்  கட்டப்பட் கல்லணை இன்றும் கம்பீரமாக உள்ளது ஆனால் நான் விவசாயின் மகன் நான் ஒரு விவசாயி என வெட்கமின்றி கூறிக்கொள்ளும் பழனிசாமி முக்கம்பு மேலணை உடைவதுகூட கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இன்று அணைக்கு ஜூரம் வந்திருக்கிறது அது சரியாகிவிடும் என கதைவிடுகிறார்.

மணல் கொள்ளையால்தான் இன்று ஒன்பது மேலணைகளும் உடைந்துள்ளன. மேலம் சில அணைகள் உடைய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லை மேட்டூர் அணை இந்த ஆண்டு மூன்று முறை நிரம்பியுள்ளது. ஆனால் அந்த காவிரி நீர் எந்த ஒரு பயன்படும் இல்லாமல் கடலிலே போய் கலப்பதை கண்டு கலங்கும் விவசாயிகளையும், ஏழை எழிய மக்களின் கண்களில் வரும் கண்ணீரை பார்க்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது என்றார். ஜெயலலிதா இருந்தபோது 2013ம் ஆண்டு காவிரியில் இருந்து மழை வெள்ளத்தால் வருகின்ற உபரி நீரை சேமிப்பதற்க்காக ஏப்ரல் மாதம் பட்ஜெட்டில் அதற்கான நிதியை ஒதுக்கினார்கள். ஆனால் இன்றுவரை அந்த திட்டம் தொடங்கப்படவில்லை அம்மாவின் ஆட்சி எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் அவர்களுடைய திட்டத்தை செயல்படுத்தவில்லை. ஊழல் செய்வதற்காகவே மறாமத்து பணி ஆறுகள் சீரமைப்பு பணி என சொல்லுறாங்க. ஆனா அதுபோல ஏதாவது நடந்துருக்கா அரசாங்க பணம் எல்லாம் அமைச்சர் பாக்கெட்டுல இருக்கு.

இந்த ஆட்சிக்கான இறுதிக்கட்டமானது வெகு விரைவில் வருகிறது. 18 எம்.எல்.ஏகளில் வழக்கில் தீர்ப்பு வரவிருக்கிறது. அதோடு இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நம் காவிரி டெல்டாவான நம் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் நிலக்கரி எடுக்கிறோம் மீத்தேன் எடுக்கிறோம் என மத்திய அரசின் அனுமதியோடு கடலூரிலிருந்து மன்னார்குடி வரையிலான இரண்டறை லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கையகபடுத்த உள்ளார்கள் அதை ஒருபோதும் நாம் அனுமதிக்ககூடாது போராடி தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம். எட்டுவழிச்சாலை, பத்துவழிச்சாலை என போட்டால் தமிழகம் வளர்ச்சி பெறும் இந்த திட்டங்கள் தொலைநோக்கு திட்டம் எனவேதான் செயல்படுத்தப்படுகின்றன கூறுகினது இந்த அரசு. தற்போது ஆற்றிலே வந்த வெள்ள நீரைக்கூட தேக்கிவைக்கமுடியாமல் கடலில் வீணாகி கலந்துபோனதால் இன்று விவசாயம் அழியும் நிலை வந்துள்ளது இதுதான் இந்த அரசுடைய நிலை.

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்காக விட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது பொய் பிஜேபி காரர்களுக்காகதான் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் ஆட்சி பழனிசாமி ஆட்சியோ பன்னீர்செல்வம் ஆட்சியோ இல்ல. டெல்லியில் இருந்து வரும் உத்தரவை வைத்து நடைபெறும் ஆட்சி இது. குக்கிராமத்தில் உள்ள அப்பனுக்கும் குப்பனுக்குமே தெரியும். என்னை மிரட்டிதான் ராஜினாம கடிதம் வாஙங்குனாங்கனு பன்னீர்செல்வம் சொல்ட்றது வைச்சே அவரோட குணாதிசியம் எப்படினு பாத்துகோங்க ஒரு முதலமைச்சரா பெரிய பதவில இருக்கும்போது நான் எப்படி அவர மிரட்டி கையெழுத்து வாங்ககமுடியும்” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய தினகரன், “ஆர்.கே நகர் தொகுதியில் நாங்க டோக்கன் கொடுத்துதான் வெற்றிபெற்றோம் என்று எங்கமீது பழி சுமத்தி வழக்கும் போட்டீர்கள். ஆனால் கோர்டே சொல்லிவிட்டது  நாங்க டோக்கன் கொடுத்ததற்கும், பணம் கொடுத்தற்கும் ஆதாரம் இல்லையென்று. திருப்பறங்குன்றத்துலயும், திருவாரூர்லயும் வரும் இடைத்தேர்தலுகாக ஏற்கனவே டோக்கன் கொடுத்துட்டோம் மக்கள் எல்லாரும் தயாரா இருகாங்க குக்கர் என்கிற டோக்கன் கொடுத்திருக்கோம். தேர்தலில் சந்திப்போம். ஆனால் அதற்கு முன்னாடியே இந்த ஆட்சி போய்விடும் என்று நினைக்கிறேன்” எனக்கூறி கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தார்.


Share this page