Select Page

City Union Bank



Share this page

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களான ஐந்து சமூக செயல்பாட்டாளர்களை போலீசார்கைது செய்துள்ளது. யார் இவர்கள், இவர்களின் பின்னணி என்ன?

கடந்த 1817ஆம் ஆண்டு பேஷ்வா ராணுவத்துக்கு எதிரான போரில் இறந்து போன மஹர் இன மக்களை நினைவுகூரும் வகையில், 2-வது நூற்றாண்டு விழா கடந்த வருடம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் கிராமத்தில் கடந்த ஆண்டு தலித்துகளுக்கும், பேஷ்வா சமூகத்தினரும் இடையே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் என 5 பேரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள் எனக் கூறி கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த ஐந்து பேர் டெல்லி, மும்பை, ஹைதரபாத், புனே மற்றும் ராஞ்சி என நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களின் பெயர்கள் அருண் பெரேரா, கவுதம் நவ்லகா, வெர்னோன் கோன்சல்வேஸ், சுதா பரத்வாஜ், வரவர ராவ் ஆகும். இவர்களின் கைது சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 153 ஏ, 505 (1) பி, 117, 120 பி, 13, 16, 18, 20, 38, 39, 40 கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என ANI ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த ஐந்து பேர் யார்? ஏன் இவர்கள் கைது செயப்பட்டனர்?

அருண் பெரேரா:

மகாராஷ்டிராவை சேர்ந்தவரான இவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(IAPL) அமைப்பில் பொருளாளராக உள்ளார். ஏற்கனவே இவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

கவுதம் நவ்லகா:

இவர் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவர் டெல்லியில் வசித்து வருகிறார். அங்கு உள்ள ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் குழுவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காஷ்மீர் மாநிலத்தில் நுழைவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

வெர்னோன் கோன்சல்வேஸ்:

கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி வரும் வெர்னோன் கோன்சல்வேஸ் மும்பையை சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர். ஏற்கனவே இவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று தண்டனை பெற்று வந்துள்ளார்.

சுதா பரத்வாஜ்:

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் ஆர்வம் காட்டி வரும் இவர், கடந்த 29 வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (IAPL) அமைப்பில் துணைத் தலைவராக உள்ளார்.

வரவர ராவ்

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இவர் எழுத்தாளர் ஆவார். இவர் நக்சலைட் ஆதரவாளர் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் அரசாங்கம் நக்சலைட்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான ஒரு முன்மொழிவை ஏற்றுக் கொண்டது. இந்த பேச்சுவார்த்தைகளுக்கு வரவரா ராவ் மற்றும் கடார் என்பவர்கள் மத்தியஸ்தராக செயல்பட்டார்.


Share this page