திமுக தலைவராக மு.க.ஸ்டாலினின் முதல் உரை:
*நான் கலைஞர் இல்லை, எனக்கு அவர் போல் பேசத் தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிச்சல் எனக்கு உண்டுஎன துவக்கத்தில் பேசிய ஸ்டாலின் மேலும் பேசுகையில்
மக்களாட்சியின் மதச்சார்பற்ற கொள்கையை சிதைக்கும் முயற்சியில் தற்போது நடைபெறுகிறது. தமிழகத்தில் சுயமரியாதை கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.என்றார் .
எனது கனவை தனிமனிதனாக நிறைவேற்ற இயலாது. தொண்டர்களுடன் இணைந்து செயல்படுவேன்
இன்று நீங்கள் கேட்கும், பார்க்கும் மு.க.ஸ்டாலினாகிய நான் வேறு ஒரு ஸ்டாலின். இன்று நான் புதிதாய் பிறக்கிறேன். இன்று என்னோடு புதிதாய் பிறந்திருக்கும் தொண்டர்களுக்கு வாழ்த்துகள்-ஸ்டாலின்.*
தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக அனைவரும் இருக்க வேண்டும். உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி தலைமை இருக்கும்.சுயமரியாதை, சமத்துவம் ஆகியவற்றிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லைஎன பேசினார் ஸ்டாலின்..
திமுகவினர் அனைவரையும் சேர்ந்து பணகயாற்ற அழைக்கிறேன். இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல, தீயை தாண்ட…..நீதித்துறை, கல்வித்துறையில் மாநில அதிகாரம் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.மத்திய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது. இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும்..முதுகெலும்பில்லாத மாநில எடப்பாடி அரசை தூக்கி எறிவதுதான் நமது முதல் கடமைஎன பேசினார்
![]() |
ReplyForward
|