Select Page

City Union Bank



Share this page

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார். திமுக தொண்டர்கள் படைசூழ மெரினாவில் அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் நாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக-வின் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க. அழகிரி தனது குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைவர் கலைஞரின் உன்மையான, விசுவாசமான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். அனைவரும் என்னை ஆதரித்துக்கொண்டு இருக்கின்றனர் எனக் கூறினார். இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக, அவரது மூத்த மகன் மு.க அழகிரி அறிவித்துள்ளார். அதேவேளையில், அடுத்த வாரம் 28 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணி அளவில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தற்போது திமுகவின் பொருளாளர் பதவி மு.க ஸ்டாலினிடம் உள்ளது. வரும் 28 ஆம் தேதி, அவர் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுக கட்சியின் கொள்கை படி, திமுகவில் யாரும் இரண்டு பதவியை வகிக்கக் கூடாது. இதனால் மு.க. ஸ்டாலின் தனது பொருளாளர் பதவியை ராஜினமா செய்ய வேண்டி இருக்கும். திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this page