Select Page

City Union Bank



Share this page

கேரளாவில் பெய்த கனமழையால் வரலாறு காணாத அளவுக்கு பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இதனை இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது. இதில் சிக்கி 10.28 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 370 பேருக்கும் மேலாக உயிரிழந்துள்ளனர். ரூ.20,000 கோடிவரை பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்தை மீட்க வேண்டி சாமானிய மக்கள் முதல் சினிமா துறையினர், கார்ப்பரேட் நிறுவனங்கள் என நிவாரண உதவிகள் பல செய்துவருகின்றனர். பாதிப்புகளை சரிசெய்வதற்காக மத்திய அரசிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.2600 கோடி நிதியுதவி கோரினார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு இதுவரை ரூ.600 கோடி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக அரசு ரூ.700 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீகரம் மட்டுமல்லாமல் மாலத்தீவு ரூ.35 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் ஐக்கிய நாடுகள் சபையும் உதவுவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்தியா இதனை ஏற்குமா என சந்தேகங்கள் எழுப்புபடுகிறது .

ஏனெனில் எந்த ஒரு நாட்டிடமோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்தோ உதவிகளை வாங்குவதில்லை என்பதை 2007ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஒரு கொள்கையாக கடைபிடித்து வருகிறது.

உதாரணமாக, உத்தரகாண்ட் (2013) மற்றும் காஷ்மீர் (2014). சென்னை (2015), வெள்ளத்தின் போதுகூட பல நாடுகள் நிதியுதவி மற்றும் அவசர உதவிகள் வழங்க முன்வந்தன. ஆனால் அவற்றை இந்தியா ஏற்கவில்லை. எங்கள் தேவைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என்ற ரீதியில் செயல்பட்டது.

ஆனால் அமீரக அரசு தனது அறிவிப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அப்படி அமீரகம் மத்திய அரசு தகவல் தெரிவித்தால், அதனை ஏற்கும் விஷயத்தில் இறுதி முடிவு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கையில் தான் இருக்கிறது.ஆனால் கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளில் இருந்து திட்டத்திற்கான கடன் தொகையை மாநிலங்கள் நேரிடையாக மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டு பெற்றுக்கொள்ள மத்திய அரசு சட்டவிதிகளை திருத்தியுள்ளது .ஆகவே அமீரக நாட்டின் உதவிகளை பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளதாக ஒரு சில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .கேரளா அமீரக உதவிகளை மத்திய அரசு அனுமதிக்க மறுத்தால் கேரளா புனரமைப்புகளாக நீண்ட கால கடனாக நிதி ஆதாரத்தை பெற்று கொள்ள ஆலோசிப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன .கேரளா மாநிலத்தவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் ஏராளமானோர் வேலை செய்வதால் அமீரக நாடுகள் ருபாய் 700 கோடி தர முன்வந்துள்ளது .மத்திய அரசு இதற்கு ஏதேனும் முட்டு கட்டை போட நினைத்தால் கேரளா மாநில மக்களின் கோபம் பாஜக மீது திரும்பும் எனவும் மத்திய அரசு எண்ணுகிறது .

கேரள அரசு வெள்ளநிவாரணமாக மத்தியஅரசிடம் கேட்டது ரூ.2600 கோடி. ஆனால் அளித்தது வெறும் ரூ.600 கோடி . எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக கண்டித்துள்ளன.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என்று பாரபட்சம் பார்க்காமல் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.


Share this page