Select Page

City Union Bank



Share this page

என் தந்தையின் இறப்பு எனது வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றது என ராகுல் காந்தி உருக்கமான ட்விட்..

 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 40 வது வயதிலேயே பிரதமரானவர். மிகவும் இளைய வயதில் பிரதமர் பதவியை ஏற்றவர் என்ற பெருமைக்கு உரியவர் ராஜீவ். ஸ்ரீபெரும்பத்தூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில், தற்கொலைப் படையால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தந்தையின் பிறந்தநாளை ஒட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை கேரிப்பிட்டுள்ளார். அதில், ‘மிகவும் பாசமுள்ள, அன்பு கொண்ட மனிதர் என் தந்தை. அவரின் இறப்பு எனது வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றது. அவருடன் நான் செலவு செய்த நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் உயிருடன் இருக்கும்போது, கொண்டாடிய பிறந்த நாள்களை எண்ணிப் பார்க்கிறேன். அவர் இல்லாமல் மிகவும் வாடுகிறேன். ஆனால், அவர் நினைவுகள் என்றும் வாடாது’ என்று உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

View image on Twitter

 

 


Share this page