காடுவெட்டி குரு மரணம் அடைந்த போது பா.ம.கவினர் அரசுப் பேருந்துகளைச் சேதப்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளிக்க ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.