Select Page

City Union Bank



Share this page

பாஜகவில் இருந்து தேர்வான முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் வாஜ்பாய். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்துள்ளார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமானார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2004 -ஆம் ஆண்டு கணக்குப்படி, வாஜ்பாய் சொத்து மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும். தில்லி கிழக்கு கைலாஷ் பகுதியில் எஸ்.பி.எஸ் அபார்ட்மெண்டில் சொந்தமாக பிளாட் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம். மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் பரம்பரை வீட்டின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

தில்லி எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.3.82 லட்சம் சேமிப்பாக உள்ளது. மற்றொரு கணக்கில் ரூ.25 லட்சம் உள்ளது. சேமிப்பு பத்திரங்கள் ரூ.1.20 லட்சம் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.58 லட்சம் வருகிறது.


Share this page