கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடக்கையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் பிரதமர் மோடியை “நீச் ” என்று விமர்சனம் செய்தார் .இதை மோடி குஜராத் தேர்தலின் போது குஜராத் மக்களை மணிசங்கர் ஐயர் தரம் குறைந்த வார்த்தைகளால் திட்டுவதாக பிரச்சாரம் செய்தார் .ஐயர் விமர்சனம் மோடிக்கும் ,பாஜக வுக்கும் அனுதாபம் ஏற்படுத்தும் என்ற விமர்சனம் எழுப்பப்பட்டதால் அவர் கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கம் செய்ய பட்டிருந்தார் .தற்போது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு ஐயர் தெரிவித்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு கட்சியில் சேர்க்க கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்தது .காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குழுவின் பரிந்துரையை ஏற்று மணிசங்கர் ஐயர் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டுள்ளார் .