பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற விழாவில் இந்திய ஒய்வு பெற்ற கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் பிரமுகரும் ஆன நவ ஜோதி சிங் சித்து கலந்து கொண்டதை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்துள்ளது .சக கிரிக்கெட் வீரர் என்ற முறையில் சித்து கலந்து கொண்டாலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி நாடு துக்கம் அனுஷ்டிக்கும் நேரத்தில்
அவர் இந்த விழாவில் பங்கு பெற்று இருக்கக்கூடாது என நேற்று பஞ்சாப் லூதியானாவில் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பாஜக செய்தி தொடர்பாளர் டாக்டர் சம்பத் பத்ரா கூறுகையில் சித்து இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவுக்கு செல்ல காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் அனுமதி பெற்றாரா என காங்கிரஸ் விளக்கம் அளிக்கவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் .