Select Page

City Union Bank



Share this page

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெராம்பட்டு ஊராட்சிக்குட்டபட்ட மடத்தான்தோப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் மற்றும் குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் பால் பிரட் மற்றும் பிஸ்கட் பொருட்களை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தண்டபாணி கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட திட்ட இயக்குநர் ஆனந்ராஜ், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்


Share this page