இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
‘கடந்த சில நாள்களாக கேரளா, கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபிணி உள்ளிட்ட அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது.
இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறந்து ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
மேலும், மண் அரிப்பால் கொள்ளிடம் பாலத்தின் 18-வது தூண் உடைந்து ஆற்றுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில், போக்குவரத்தை மட்டும் அரசு தடை செய்துள்ளது. பாலத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அதிமுக அரசு அமைதி காத்து வருவது கண்டனத்துக்குரியது.
எனவே, மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், ராணுவ உதவியுடன் உடனடியாக கொள்ளிடம் ஆற்று பாலத்தை சீரமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.