திராவிட முன்னற்ற கழகத்தின் மறைந்த தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருக்குவளை .சாதாரண பின் தங்கிய வகுப்பில் பிறந்த கருணாநிதி திருகுவளையில் தான் ஆரம்ப கல்வி கற்றார் .கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் பிறந்த ஊர் அடங்கிய திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார் .கருணாநிதி மறைவுக்கு பிறகு இன்று திருக்குவளை சென்ற திராவிட முன்னற்ற கழகத்தின் செயல் தலைவர் மு .க .ஸ்டாலின் கருணாநிதி திருவுருவ படத்திற்க்கு அஞ்சலி செலுத்தினார் .அவருடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, உதியநிதி ஸ்டாலின் ,முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி ,கே .என் .நேரு உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர் .
பட உதவி -அப்பு சந்திரசேகர்