Select Page

City Union Bank



Share this page

ஆலப்புழா : கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 96 வயது பாட்டி, ௪ம் வகுப்பு தேர்வு எழுதி, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம், முழுமையான கல்வியறிவு மிக்க மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின், மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் குறைந்ததையடுத்து, மீண்டும், 100 சதவீத இலக்கை எட்ட, மாநில அரசு முடிவு செய்தது.

மூத்த குடிமக்கள், பழங்குடியினர், மீனவர்கள், குடிசைப் பகுதிகளில் வசிப்போரில், கல்வியறிவு இல்லாதவர்களுக்கு எழுத, படிக்க கற்றுத் தரும் வகையிலான எழுத்தறிவு திட்டத்தை, கடந்தாண்டு, மாநில அரசு துவங்கியது. இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்த முதியோருக்கு, ௪ம் வகுப்பு மாணவர்களுக்கான தரத்தில், ஆங்கிலத்தில் வாசித்தல், மலையாளம் மற்றும் கணிதம் ஆகியவை கற்றுத் தரப்பட்டன.

சமீபத்தில், மாநிலம் முழுவதும் நடந்த ௪ம் வகுப்பு தேர்வில், 45 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆலப்புழா மாவட்டம், கனிச்சநல்லுார் அரசு பள்ளியில், 45 பேர் தேர்வெழுதினர். அவர்களில், கார்த்தியாயினி, 96, என்ற பாட்டி, ஆங்கிலத்தில் வாசிக்கும் தேர்வில், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

”என் வாழ்நாளில், நான் எழுதிய முதல் தேர்விலேயே வெற்றி பெற்றது, மகிழ்ச்சி தருகிறது,” என, கார்த்தியாயினி பாட்டி கூறினார்.


Share this page